தருமபுரி

சமூக அறிவியலில் 1,705 பேர் சதம்

DIN

தருமபுரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 1,705 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மாவட்டத்தில் 22,893 மாணவ, மாணவியர் எழுதினர். இதில், சமூக அறிவியல் பாடத்தில் மட்டும் 1,705 பேர் 100 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
அதேபோல, தமிழ் பாடத்தில் 3 பேரும், கணிதப் பாடத்தில் 555 பேர் மற்றும் அறிவியல் பாடத்தில் 478 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அங்கன்வாடி ஊழியர் சங்க அமைப்பு தினம்
தருமபுரி, மே 19:  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 16-ஆம் ஆண்டு அமைப்பு தின விழா மற்றும் கொடியேற்று விழா தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி, சங்கக் கொடியை சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஜி.நாகராஜன் ஏற்றினார். அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அங்கம்மாள், மாவட்டத் தலைவர் சண்முகசாந்தி, மாவட்டச் செயலர் முருகம்மாள், பொருளர் தெய்வானை, ராஜம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT