தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டியில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

DIN

பாப்பிரெட்டிப்பட்டியில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் 2 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வந்தன. இந்த மதுக்கடையில் மது வாங்குவோர் சாலையோரங்களில் அமர்ந்து மது அருந்தி வந்தனர். இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இன்னல்கள் அடைந்து வந்தனர். இதையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் கடந்த 16-ஆம் தேதி, அந்தப் பகுதியில் இருந்த 2 டாஸ்மாக் மதுக்கடைகளையும் பூட்டினர்.
இதையடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மதுக்கடையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த அரூர் டிஎஸ்பி ஏ.சி. செல்லப்பாண்டியன், காவல் ஆய்வாளர் ஆனந்தவேல் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீஸார் அளித்த வாக்குறுதியின் பேரில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT