தருமபுரி

15 நாள்களுக்கு "தூய்மையே சேவை' நிகழ்ச்சிகள்

DIN

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், தருமபுரி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அக். 2-ஆம் தேதி வரை "தூய்மையே சேவை' என்ற நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தை 2018-க்குள் திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற தூய்மையான மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் "தூய்மையே சேவை' என்ற நிகழ்ச்சியை 15 நாள்களுக்கு நடத்திட மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி
யுள்ளது. இதன்படி, தருமபுரி மாவட்டத்தில் செப். 15 முதல் அக். 2-ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
இதன் ஒரு கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர் ஆகியோர் பங்கேற்று உறுதிமொழியேற்றனர். இதேபோல, மாவட்டம் முழுவதும் அனைத்து கிராம சேவைக் கட்டடங்கள் முன் வறுமை ஒழிப்புச் சங்கப் பிரதிநிதிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, வரும் செப். 18-ஆம் தேதி முதல் அக். 1-ஆம் தேதி வரை நீர்நிலைகள், பள்ளிக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், மருத்துவமனைகள், அரசுக் கட்டடங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடுமிடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, முன்-பின் படங்கள் மற்றும் சிறு குறிப்புடன் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
இந்தப் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ,தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர் மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் பரிசு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. படங்களையும், குறிப்பையும் அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
ற்ட்ன்ண்ம்ஹண்க்ட்ஹழ்ம்ஹல்ன்ழ்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம், ஹல்ர்ற்ள்ஸ்ரீக்ல்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் மேலும் விவரங்களுக்கு 04342 230722, 94420 24420 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செந்தில்குமார் (பொது), சித்ரா (வளர்ச்சி), மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT