தருமபுரி

அதியமான் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
அதியமான் கல்வி குழுமத்தின் நிறுவனர், செயலர், முதல்வர், நிர்வாக அலுவலர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் பானுப்பிரியா வரவேற்றார். அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் அன்றாட வாழ்வில் நேனோ தொழில்நுட்பமும், அதன் முக்கியத்துவம் குறித்தும் தலைமையுரையாற்றினார். கல்லூரி செயலர் ஷோபா வேதி அறிவியலின் முன்னேற்றம் குறித்து சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் கணேசன் வேதியியலின் முக்கியத்துவம் குறித்து மாணவியருக்கு எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினர்களை வேதியியல் துறைத் தலைவர் வனிதா மற்றும் உதவிப் பேராசிரியர்கள் அறிமுகம் செய்து வைத்தனர்.
முதல்நாள் கருத்தரங்கில் வேலூர் முத்துரங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் கே.கீதா 'நேனோ தொழில்நுட்பத்தின் முன்னேற்றம்' குறித்து விளக்கினார். கேரள ரப்பர் தொழிற்சாலை கோட்டயம் இயக்குநர் முனைவர் ரோசம்மா அலெக்ஸ் 'பலபடியாக்கல் வேதியியல்' எனும் தலைப்பில் ரப்பரின் பயன்பாடுகள் குறித்து விரித்துரைத்தார்.
இரண்டாம்நாள் கருத்தரங்கில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வேதியியல் துறைத் தலைவர் முனைவர் சையத்சபி 'பலபடியாக்கல் வேதியியலின் அன்றாட பயன்பாடுகள்' எனும் தலைப்பில் விரித்துரைத்தார். அடுத்த நிகழ்வில் குப்பம் பொறியியல் கல்லூரி வேதியியல் இணைப் பேராசிரியர் முனைவர் வெங்கட்டரெட்டி கொர்லர் 'மருத்துவ சிந்தனை பயன்கள்' குறித்து விளக்கினார். இதில், அதியமான் கல்லூரி வேதியியல் துறை உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இக்கருத்தரங்குக்கு கொன்சாகா, இ.ஆர்.கே, பச்சமுத்து, தூயநெஞ்சக் கல்லூரி, கிருஷ்ணகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வித்யா மந்திர், ஐ.கே.கே. ஆகிய கல்லூரி மாணவ, மாணவியரும் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளை வழங்கினர்.
கலந்துகொண்ட அணைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் சண்முகப்பிரியா மற்றும் தீபிகா நன்றி கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT