முகப்பு
தருமபுரி

தீர்த்தமலையில் இன்று யோகி சடை சுவாமிகள் குரு பூஜை

அரூரை அடுத்த தீர்த்தமலையில் தவத்திரு யோகி சடை சுவாமிகளின் 56-ஆவது குருபூஜை விழா திங்கள்கிழமை (ஏப்ரல் 9)  நடைபெறுகிறது. 

Updated On : 9 ஏப்ரல், 2018 at 7:57 AM
பகிர்:

அரூரை அடுத்த தீர்த்தமலையில் தவத்திரு யோகி சடை சுவாமிகளின் 56-ஆவது குருபூஜை விழா திங்கள்கிழமை (ஏப்ரல் 9)  நடைபெறுகிறது. 
விழாவில் மாலை 4 மணியளவில் ஆன்மிக சொற்பொழிவாளர்கள் நா.நாகராசனார், கோ.மலர்வண்ணன், செ.செவ்வேள்முருகன், புலவர் காளியப்பனார் ஆகியோர் அறநெறிச் சொற்பொழிவாற்றுகின்றனர். தொடர்ந்து, யோகி சடை சுவாமிகளின் திருத்தேர் திருவீதி உலா, அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 
தொடர்ந்து இரவு 10 மணியளவில் மின்னல் ஒளி அர்ச்சுணன் குறவஞ்சி எனும் பக்தி நாடகம் நடைபெறும் என விழாக் குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.