தருமபுரி

கோடியூரில் ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே உள்ள கோடியூரில் ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அதியமான்கோட்டை ஏரியின் அருகே உள்ளது கோடியூர் கிராமம். இக்கிராமத்துக்கு அதியமான்கோட்டையிலிருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்கரை வழியாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. மேலும், கோடியூரிலிருந்து தேங்காய்மரத்துப்பட்டி மற்றும் வெங்கட்டம்பட்டி ஆகிய கிராமங்களை இணைக்கும் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
இச்சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் அதியமான்கோட்டை மற்றும் நல்லம்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்றுவருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கோடியூரிலிருந்து தேங்காய்மரத்துப்பட்டி மற்றும் வெங்கட்டம்பட்டி கிராமங்களை இணைக்கும் தார்ச்சாலை சுமார் 2 கி.மீட்டர் தொலைவுக்கு ஜல்லி கற்கள் பெயர்ந்து முற்றிலும் வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் உள்ளது.
இந்த நிலையில், அதியமான்கோட்டை ஏரிக்கரை வழியாக கோடியூர் கிராமத்துக்கு செல்லும் சாலை மட்டும் அண்மையில் புதியாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கோடியூரிலிருந்து பல்வேறு கிராமங்களை இணைக்கும் சாலை சரிசெய்யப்படவில்லை.
இதனால், ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT