முகப்பு
தருமபுரி

கிரானைட் தொழிலதிபர் வீட்டில் நகை திருட்டு?: போலீஸார் விசாரணை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டிலிருந்த பணம், நகை திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த கிரானைட் தொழிலதிபரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டிலிருந்த பணம், நகை திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த கிரானைட் தொழிலதிபரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ராமியம்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் பிரபாகரன் (28). இவர், ராமியம்பட்டி மற்றும் ஆந்திர மாநிலத்தில் கிரானைட் தொழில் செய்து வருகிறாராம். இந்த நிலையில், பிரபாகரன் தனது குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்த போது
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பணம் ரூ.62 லட்சம், 20 பவுன் நகை காணவில்லை என பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
பொய் புகார்?
கிரானைட் தொழிலில் பிரபாகரனுக்கு கடன் தொல்லை அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது வீட்டில் பணம், நகைகள் திருடுபோனதாக பொய்யான புகாரை போலீஸாரிடம் அவர் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் நேரில் ஆய்வு நடத்தினார். இதுகுறித்து அவர் கூறியது:
பிரபாகரன் அளித்தது பொய்யான புகார் என தெரிகிறது. இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →