முகப்பு
தருமபுரி

தேசிய ஊரக வேலை திட்டம்: நிலுவை கூலியை விரைந்து வழங்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ்

தருமபுரி

தேசிய ஊரக வேலை திட்டம்: நிலுவை கூலியை விரைந்து வழங்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான கூலியை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜெ. பிரதாபன் வெளியிட்ட அறிக்கை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2013-14ஆம் ஆண்டு முதல் 2017-18ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு கூலி வழங்கப்படவில்லை. இதற்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தருவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கடந்த 6 மாதங்களாக இத்திட்டத்தில் எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கும் உரிய நிதி மற்றும் அனுமதியைப் பெற்று, மாவட்டம் முழுவதும் 251 ஊராட்சிகளிலும் உள்ள நீர்நிலைகளை முழுமையாக தூர்வாரி சீரமைக்க வேண்டும். இதுவரை பணி வழங்காத 6 மாதங்களுக்கு அரை நாள் ஊதியத்தை பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →