தருமபுரி

"பெண் குழந்தைகள் பிறப்பு  விகிதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்'

DIN

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க களப் பணியாளர்கள் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார். 
தருமபுரியில் வெள்ளிக்கிழமை சமூக நலத்துறை சார்பில், களப் பணியாளர்களுக்கு உணர்திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது, தருமபுரி மாவட்டத்தில் பெண் சிசு இறப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகப்படுத்தும் நோக்கில், கிராமம் மற்றும் நகரங்களில் பெண் குழந்தைகளின் பெருமைகள், அரசு வழங்கும் நலத் திட்டங்கள் குறித்து களப் பணியாளர்கள் எடுத்துரைக்க வேண்டும். அதற்காக செயல் திட்டம் தயாரித்து பணியாற்ற வேண்டும் என்றார்.
மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி, மாவட்ட திட்ட அலுவலர் பத்மாவதி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) முல்லை சாரதி, அலுவலர்கள், களப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT