தருமபுரி

அரூரில் இலவச நீட் பயிற்சி மையம் தொடங்க கோரிக்கை

DIN

அரூரில் அரசு சார்பில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்க வேண்டும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் ஒன்றியங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான
மேல்நிலை வகுப்பு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பகுதி மாணவர்கள் தனியார் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் சேருவதற்கான வசதிகள் இல்லாமல் உள்ளனர். இதனால் திறமை இருந்தும் பல மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்க முடியாமல் உள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டில் அரூர் பகுதியில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்கப்படும்
என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பயிற்சி மையம் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.  எனவே, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் நோக்கில் 
அரூரில் விடுதி வசதியுடன் கூடிய  இலவச நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தை அரசு தொடங்க வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பு.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT