முகப்பு
தருமபுரி

அனுமன்தீர்த்தம் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற மூவர் கைது

ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்து வந்த மூன்று பேரை ஊத்தங்கரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On : 15 மே, 2018 at 2:45 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்து வந்த மூன்று பேரை ஊத்தங்கரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் காட்டேரி ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் (38), அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55), அனுமன்தீர்த்தம் மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த கணேசன் (60) ஆகியோர் மீது அரசு அனுமதியின்றி மதுபுட்டிகளை விற்பனை செய்ததாக வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்து 155 மதுப் புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.