இலவசக் கட்டாயக் கல்வி விண்ணப்பங்களில் தகுதியானவற்றை தகவல் பலகையில் வெளியிட வேண்டும்
தருமபுரி மாவட்டத்தில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில் தகுதியானவற்றை பள்ளியின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என மாவட்ட முதன்மைக்
தருமபுரி மாவட்டத்தில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில் தகுதியானவற்றை பள்ளியின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு
சிறாருக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2018-19ஆம் கல்வியாண்டில் எல்கேஜி முதல் 1ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் சேருவதற்கு கடந்த மே 18ஆம் தேதி வரை பெற்றோர்கள் இணையவழியில் விண்ணப்பித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் இச்சட்டத்தின்கீழ் 75 மெட்ரிக் பள்ளிகள் மற்றும் 97 நர்சரி பள்ளிகளில் மொத்தம் 3,287 (25 சதவிகிதம்) இடங்கள் உள்ளன. இவற்றுக்கு இணையவழியில் விண்ணப்பித்தோரில் தகுதியானவர்களின் பட்டியலை வரும் மே 25ஆம் தேதி பள்ளியின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
மே 28ஆம் தேதி குலுக்கல் முறையில் சிறார்கள் தேர்வு செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலையும் தகவல் பலகையில் மே 29ஆம் தேதி வெளியிட வேண்டும்.