தருமபுரி

லாரி எரிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் சிலரிடம் விசாரணை

DIN

கடந்த மாதம் தொப்பூர் கணவாய்ப் பகுதியில் லாரி தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையிலிருந்து மும்பைக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றிய சரக்கு லாரி கடந்த மாதம் 21-ஆம் தேதி தொப்பூர் கணவாய் பகுதியில் வந்த போது தீப்பற்றி எரிந்தது.
இந்த லாரியை பின்தொடர்ந்து வந்த மற்றொரு லாரி உள்ளிட்ட மூன்று வாகனங்கள் மீதும் தீப்பற்றியதில் எரிந்து சேதமடைந்தன.
இதுதொடர்பாக தொப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் லாரியில் ஏற்றி வரப்பட்ட தேங்காய் எண்ணெய் டப்பாக்களில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான எண்ணெய் டப்பாக்களை மேச்சேரியில் நிறுத்தி மாற்று லாரியில் ஏற்றி அனுப்பி விட்டு தொப்பூர் வந்ததும் ஓட்டுநர் உள்ளிட்டோர் லாரியை தீவைத்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் சங்கரன், விஜயகுமார், லாரி உரிமையாளர் பிரபு, சேகர் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் சிலருக்கு தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்களைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT