தருமபுரி

பென்னாகரம் கல்லூரியில் தொலைதூரக் கல்வி மையம் தொடக்கம்

DIN

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே மாமரத்துப்பள்ளத்தில்  உள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொலைதூரக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அக்கல்லூரி முதல்வர் க.செல்வவிநாயகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பென்னாகரம் கல்லூரியில் பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பெரியார் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
இதன் மூலம், பென்னாகரம்,  பாலக்கோடு, தருமபுரியைச் சார்ந்தவர்கள் மற்றும் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்றவர்கள், இளங்கலை பட்டப்படிப்பு பயில விரும்புவோர், முதுகலை பயில உள்ளவர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர், இளைஞர்கள், இல்லத்தரசிகள் அனைவரும் கல்லூரியில் நேரடியாகச் சேர்க்கை பெற்று பயிலலாம். கல்லூரி மையத்தில் சேர்ந்து பயில்வோருக்கு விடுமுறை நாள்களில் தகுதியான பேராசிரியர்களை கொண்டு எளிமையான முறையில் பாடவகுப்புகள் நடத்தப்படும். மேலும், பல்கலைக்கழகத் தேர்வு கல்லூரிலேயே நடைபெறும். அதேபோல, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார்த் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதோடு, போட்டி தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும். பாடப் பிரிவுகள் மற்றும் கட்டணங்கள் குறித்து பல்கலைக்கழக இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கல்வித் தரத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT