முகப்பு
தருமபுரி

விளையாட்டுப் போட்டிகளில் கடத்தூர் பெண்கள் பள்ளி சிறப்பிடம்

பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:33 AM
பகிர்:

பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.
நிகழ் கல்வியாண்டிற்கான சரக அளவிலான தடகளப் போட்டிகள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. போட்டிகளில் பங்கேற்ற கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று 55 பதக்கங்களை பெற்றனர். மேலும், 130 வெற்றி புள்ளிகள் பெற்று 13-ஆவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 
இதில், இளையோர் பிரிவில் மாணவி எம். அபிதாஸ்ரீ, மூத்தோர் பிரிவில் மாணவி சி.அஸ்வினி ஆகியோர் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேந்திரன், எஸ்.தென்றல் மற்றும் எஸ்.சிவனேஸ்வரி ஆகியோரை தலைமை ஆசிரியை த.வே.ரமாதேவி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.