தருமபுரி

பாம்பாறு அணைக் குடியிருப்பில் தண்ணீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

DIN


ஊத்தங்கரை பாம்பாறு அணைக் குடியிருப்பில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள பாம்பாறு அணைக் குடியிருப்பு 1978-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இக் குடியிருப்பில் உதவி செயற்பொறியாளர் வீடு உள்பட 26 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் பாம்பாறு அணை பணியாளர்கள் தங்காத நிலையில், அரசுப் பணியாளர்கள் குடியிருந்து வருகின்றனர்.
இவர்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பம்பு, கிணற்றில் உள்ள குடிநீர் ஆதாரத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த நிலையில், 3 மாதங்களாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பம்பு, கிணற்றில் தண்ணீர் வருவதில்லை. இதனால், ரூ.300 முதல் 500 வரை விலைகொடுத்து தண்ணீரை வாங்கி குடியிருப்புவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் குடியிருப்பில் தெரு விளக்குகள் எரிவதில்லை. கட்டடத்தின் மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்து வருகிறது. இதுகுறித்து பாம்பாறு அணை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் குடிநீர்,அடிப்படை தேவைகளை நிறைவு செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாம்பாறு அணை உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் கூறியது:
குடிநீர்க் கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT