தருமபுரி

பிரசவத்தில் தாய், சிசு உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

DIN

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய், சிசு உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், செக்கோடி ஆலமரத்துக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி காந்தி. இவரது மனைவி ஜோதி(29) பிரசவத்துக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.  அங்கு, அறுவைச் சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
சிறிது நேரத்திலே அக் குழந்தை உயிரிழந்தது. மேலும், ஜோதியின் உடல்நலமும் பாதிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால், அவர் உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே தனது மனைவி, குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, காந்தி மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வட்டாட்சியர் சுகுமார், துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

கடன் தொல்லையால் வணிகர் தற்கொலை!

SCROLL FOR NEXT