தருமபுரி

தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் தொடக்கம்

DIN

தருமபுரி மாவட்டத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட மற்றும் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
 ஒüவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் புதிய தலைமை ஆசிரியர்கள் 50 பேருக்கு ஐந்து நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
 இப்பயிற்சி முகாமை மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) பொன்முடி தொடக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் ரமாதேவி தலைமையில், கருத்தாளர்கள் செந்தில்வடிவு, பாபு சுந்தரம், லட்சுமணன், முசோலினி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
 இப்பயிற்சியில், தலைமைப் பண்பு, குழுக்களை உருவாக்கி வழிகாட்டுதல், தன்னை அறிதல், புதுமையை புகுத்துதல், சமுதாயத்தில் பங்களிப்பு, அலுவலக பணிகள், பதிவேடு பராமரிப்பு உள்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி உதவித் திட்ட அலுவலர் தங்கவேலு, ஒüவையார் பள்ளித் தலைமை ஆசிரியை தெரசாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT