தருமபுரி

பாலக்கோடு புறவழிச் சாலையில் உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்க கோரிக்கை

DIN

பாலக்கோடு புறவழிச் சாலையில் உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பாலக்கோடு நகருக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள் நகருக்குள்ளேயும், புறவழிச் சாலையிலும் சென்று வருகின்றன. இதில் பெங்களூரு, ஒசூர் செல்லும் வாகனங்கள் நேரத்தையும், தூரத்தையும் குறைக்க பாலக்கோடு வழியாக வாகனங்களை இயக்குகின்றன.
மேலும், பாலக்கோட்டிலிருந்து  வெள்ளிச்சந்தை வரை செல்லும் நெடுஞ்சாலைப் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது.
இந்நிலையில், சாலையில் மின்விளக்கு இல்லாததால், சர்க்கரை ஆலைக்கு  இரவு பணி செல்லும் தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக, பாலக்கோட்டை அடுத்த பிரிவு சாலைப் பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்கின்றன. எனவே, புறவழிச் சாலைப் பிரிவு பகுதியில் உயர் மின்விளக்கு கோபுரமும், சர்க்கரை ஆலை வரையில் மின்விளக்குகளை பழுது நீக்கியும் கொடுக்க வேண்டுமென  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT