தருமபுரி

கிணற்றில் விழுந்து 2 மான்கள் உயிரிழப்பு

DIN

அரூர் அருகே கிணற்றில் விழுந்து 2 மான்கள் உயிரிழந்தன.
அரூர், மொரப்பூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை வட்டாரப் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் அதிக அளவில் மான்கள் உள்ளன.  தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக, குடிநீர் மற்றும் தீவனம் தேடி மான்கள் விவசாய நிலங்களுக்கு வருகின்றன. 
இந்த நிலையில், பறையப்பட்டி புதூர் பகுதியில் விவசாய நிலத்தில் குடிநீருக்காக வந்த 2 ஆண் புள்ளி மான்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்தன.  தகவல் அறிந்து வந்த வனத் துறையினர் கிணற்றில் இருந்த 2  மான்களையும் மீட்டு,  மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு வனப் பகுதியில் புதன்கிழமை புதைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT