தருமபுரி

தானப்ப கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில் காகிதப் பை தின விழா

DIN


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தானப்பகவுண்டர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் உலக காகிதப் பை தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளி நிர்வாக இயக்குநர் வித்யா ரவிசங்கர் தலைமை வகித்து, பள்ளி மாணவர்களுக்கு நெகிழிப் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மாற்று பயன்பாட்டிற்கு காகிதப் பையை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
விழாவில் காகிதப் பைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒரே நேரத்தில் பள்ளி மாணவர்கள் 1000 பேர் காகிதப் பைகளை பல்வேறு வடிவங்களில் வடிவமைத்து அவற்றை காட்சிப்படுத்தினர்
. மேலும், நெகழிப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழியேற்றனர். இதில், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT