தருமபுரி

இன்ஜின் பழுதால் தாமதமாக சென்றது மைசூரு விரைவு ரயில்

DIN

இன்ஜின் பழுது காரணமாக  தூத்துக்குடி  -மைசூரு  விரைவு ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. 
தூத்துக்குடி - மைசூரு இடையே மதுரை - சேலம் - தருமபுரி வழியாக இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 16235) செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் தருமபுரி மாவட்டம், தொப்பூர் பகுதியில் சென்றபோது பழுதாகி நின்றது.   இதையடுத்து, பழுது சரி செய்யப்பட்டு அதிகாலை 4 மணியளவில் ரயில் புறப்பட்டுச் சென்றது. ஆனால்,  சிறிது தொலைவு சென்றபின்பு முத்தம்பட்டியில் மீண்டும் இன்ஜினில் பழுது ஏற்பட்டதால், ரயில்  நிறுத்தப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து,  தருமபுரி ரயில் நிலையத்தில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு, இணைக்கப்பட்டு பின்னர் அதிகாலை 5.35 மணியளவில் ரயில் புறப்பட்டுச் சென்றது.  இன்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக தூத்துக்குடி - மைசூரு விரைவில் ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாகச் சென்றது. ரயில் பழுதாகி நின்றதால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அவதியுற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT