தருமபுரி

கக்கன் பிறந்த நாள் விழா

DIN

அரூரில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில்,  தமிழக  முன்னாள் அமைச்சர் கக்கனின் 112 - ஆவது பிறந்த நாள் விழா,  அரூர் வட்டாரத் தலைவர் ஆர்.சுபாஷ் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் கக்கனின் உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.  இதில், நகரத் தலைவர் கே.கணேசன், மாவட்ட துணைத் தலைவர் சி.வேடியப்பன், மாவட்ட பொதுச்செயலர்கள் கக்கன் முருகேசன், சுகுமார், வட்டார துணைத் தலைவர் அருண்குமார்,  நிர்வாகிகள் பி.டி.ஆறுமுகம், வேடியப்பன், பிரகாஷ் ராஜ், அருணகிரி, மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புழுதியூரில்...
அரூரை  அடுத்த புழுதியூரில் கக்கன் காமராஜர் அறக்கட்டளை சார்பில் முன்னாள்  அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில்,  கக்கன் காமராஜர் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் பி.ஏ.குமரேசன்,  கக்கனின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில், அறக்கட்டளையின் நிர்வாகிகள் எஸ்.விமலன், ஆர்.கோபன்,  ஜடையன், கண்ணன், கே.மனோரஞ்சிதம், ஜெ.பிரியா, பரமசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT