தருமபுரி

தருமபுரி கல்லூரி மாணவியர் விழிப்புணர்வு பேரணி

தேர்தலில் 100 சதம் வாக்களிக்க வலியுறுத்தி, தருமபுரியில் வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவியர் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

DIN

தேர்தலில் 100 சதம் வாக்களிக்க வலியுறுத்தி, தருமபுரியில் வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவியர் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
பச்சமுத்து மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் பங்கேற்ற இப் பேரணியை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தொடங்கிய இப் பேரணி, நேதாஜி புறவழிச்சாலை, தொலைத்தொடர்பு நிலைய அலுவலகச் சாலை, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது.  இதில், வாக்களிக்க தகுதி படைத்த அனைவரும் தேர்தலில் 100 சதம் வாக்களிப்போம்.  ஜனநாயகம் காக்க நேர்மையாக வாக்களிப்போம் என்கிற விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT