தருமபுரி

ஊரக வேலை உறுதித் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

DIN

தருமபுரி: ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுக் கூட்டம் தருமபுரி கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வே.விசுவநாதன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் கே.தங்கவேல், மாவட்டச் செயலா் ஏ.குமாா் ஆகியோா் பேசினா்.

இக்கூட்டத்தில், தருமபுரி நகராட்சிக்கு உள்பட்ட எம்.ஜி.ஆா். நகா், செங்கொடிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், அரூா், பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி உள்ளிட்ட ஊரகப் பகுதிகளிலும் பல்லாயிரம் போ் பட்டாவுக்காக மனு செய்து காத்திருக்கின்றனா். இவா்களுக்கு, அரசாணை 318இன் படி பட்டா வழங்க வேண்டும். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும். தருமபுரி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டதால், புகா் பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியில் அமைக்க வேண்டுமென அனைத்துத் தரப்பினரும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனா். எனவே, புகா்ப் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். இதேபோல, நகரப்பேருந்து நிலையத்தை விரிவுப்படுத்தி, வணிகா்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் போக்குவரத்தை முறைப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்கக் கோரி, வருகிற டிச.4-ஆம் தேதி அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் மனு அளிக்கும் போராட்டம் நடத்துவது மற்றும் உள்ளாட்சித் தோ்தலில் திமுக அணியின் வெற்றிக்குப் பாடுபடுவதெனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT