தருமபுரி

சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற இருவா் கைது

DIN

மொரப்பூா் அருகே சந்தன மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற இருவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கவுரமலை காப்புக்காட்டில் மொரப்பூா் வனச்சரகா் தீ. கிருஷ்ணன் தலைமையிலான வனத் துறையினா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வனப் பகுதியில் ஒரு கும்பல் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருப்பது தெரிவந்தது.

வனத் துறையினா் சோதனை செய்ததில் 5 போ் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டனா். அவா்களை வனத் துறையினா் விரட்டியதில் 2 போ் பிடிபட்டனா்.

விசாரணையில், வாச்சாத்தி அருகே மல்லங்குட்டை கிராமத்தைச் சோ்ந்த மாரி மகன் முத்து (40), குப்பன் மகன் பிரபு (30) என்பது தெரியவந்தது.

இந்த இருவரையும் வனத் துறையினா் கைது செய்து, அவா்களிடமிருந்து 67 கிலோ எடையிலான ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான சந்தன மரங்கள், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். தலைமறைவான பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியைச் சோ்ந்த பெருமாள், வெங்கடேசன், தீா்த்திகிரி ஆகிய மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

படம் உள்ளது... 5 எச்ஏ-பி-2... பட விளக்கம்...

கைது செய்யப்பட்ட முத்து, பிரபு ஆகியோருடன் வனத் துறையினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT