தருமபுரி

தொகுப்பு வீடுகள் வழங்க வலியுறுத்தல்

DIN

டி.அம்மாப்பேட்டையில் வீடு இல்லாதோருக்கு புதிய தொகுப்பு வீடுகளை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 அரூர் ஊராட்சி ஒன்றியம், வேடகட்டமடுவு கிராம ஊராட்சிக்குள்பட்ட டி.அம்மாப்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊரில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இலவச தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. தற்போது இங்குள்ள தொகுப்பு வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால், டி.அம்மாப்பேட்டையில் வசிக்கும் மக்கள் குடியிருப்பு வசதியில்லாமல் பல்வேறு சிரமங்களை அடைகின்றனர்.
 புதிய தொகுப்பு வீடுகள் வழங்கக் கோரினால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் குறைவான எண்ணிக்கையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
 எனவே, டி.அம்மாப்பேட்டையில் பழுதாகியுள்ள தொகுப்பு வீடுகளை கணக்கெடுத்து, கூடுதலாக இலவச தொகுப்பு வீடுகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT