தருமபுரி

புதுரெட்டியூரில் குடிநீர் தட்டுப்பாடு

DIN

கடத்தூர் அருகேயுள்ள புதுரெட்டியூரில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கிராம மக்கள் அவதியுறுகின்றனர்.
 பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், புதுரெட்டியூரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊரில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
 அதேபோல், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திலும் குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக ஆழ்துளைக் கிணறுகளில் போதிய அளவில் குடிநீர் இல்லையாம். அதேபோல், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திலும் முறையாக குடிநீர் விநியோகம் இல்லையாம்.
 15 தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைப்பதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதுரெட்டியூர் கிராம மக்களுக்கு தேவையான குடிநீரை லாரிகள் மூலம் வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT