தருமபுரி

டெங்கு தடுப்பு பணிகள்

DIN


அரூர் பேரூராட்சிக்குள்பட்ட நகர் பகுதியில், டெங்கு தடுப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், குடியிருப்புப் பகுதிகளில் பழைய நெகழிப் பொருள்கள், டயர்கள், தேநீர் கோப்பைகள், குடிநீர் பாட்டில்களில் மழைநீர் தேங்கினால் அதில் டெங்கு கொசு புழுக்கள் உருவாகும். 
இதைத் தடுக்க, டெங்கு தடுப்பு பணிகளை தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜீஜாபாய், செயல் அலுவலர் (பொ) கே.சேகர் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் அரூர் நகரில் நடைபெறும் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
1-ஆவது வார்டு மாரியம்மன் கோயில் தெரு, சந்தைமேடு உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரப் பணிகளை பேரூராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். தொடர்ந்து, நீர் மேலாண்மை திட்டத்தில் நகர் பகுதியில் மரக் கன்றுகளை நட்டனர். இதில், துப்புரவு ஆய்வாளர் கோ.சிவக்குமார், சுகாதார மேற்பார்வையாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தேர்வு நிலை பேரூராட்சியில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், டயர், தேங்காய் ஓடுகள், உரல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், குடியிருப்புகளைச் சுற்றி சுகாதாரத்தை பராமரிக்கும் வகையிலும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பர்கூரில் இந்தப் பணியை சிறப்பு துணை ஆட்சியர் குணசேகரன், பேரூராட்சி செயல் அலுவலர் சேமகிங்ஸ்டன், தலைமை எழுத்தர் வெங்கடாஜலம் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT