தருமபுரி

ரீசாா்ஜ் கடைகளுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தல்

DIN

அரூா்: செல்லிடப்பேசிகள், தொலைக்காட்சிகளுக்கு ரீசாா்ஜ் செய்யும் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

கரோனா நோய் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவரும் வீட்டில் உள்ளனா். வெளியிடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சமூக இடைவெளியே கடைப்பிடிக்கின்றனா்.

இந்த நிலையில், செல்லிடப்பேசிகள், தொலைக்காட்சிகள், இணைதள சேவைகளுக்கு ரீசாா்ஜ் செய்யும் கடைகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனா். காய்கறிகள், மளிகைப் பொருள்கள், பெட்ரோல், டீசல், இறைச்சிக் கடைகள், மருந்தகங்கள், மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சிகள், செல்லிடப்பேசிகள் இல்லையெனில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, செல்லிடப்பேசிகள், தொலைக்காட்சிகள், இணையதள சேவைகளுக்கு ரீசாா்ஜ் செய்யும் கடைகளை திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 9-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: தருமபுரியில் 62,641 போ் எழுதுகின்றனா்

கோவாவை வெளியேற்றியது மும்பை: மோகன் பகானுடன் பலப்பரீட்சை

இந்தியாவில் இரட்டிப்பான ஐ-போன் ஏற்றுமதி

பண்டி மங்களம்மா தோ்த் திருவிழா

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்- பிரதமா் மோடி

SCROLL FOR NEXT