முகப்பு
தருமபுரி

விழுப்புரத்தில் சாதி சான்றிதழ் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருளர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி போராட்டம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
பகிர்:

விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருளர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி போராட்டம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், வானூர் வட்டம் தி.பரங்கனி, திருச்சிற்றம்பலம் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி இருளர் மாணவர்களுக்கு, ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி வியாழக்கிழமை திடீர் போராட்டம் நடத்தப்பட்டது.

மலைவாழ் மக்கள் சங்க செயலாளர் சரவணன் தலைமையில், வானூர் அருகே  தி.பரங்கனி, திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்த 50 மாணவர்கள் உள்ளிட்ட 165 பேருக்கு பழங்குடி இருளர் இன சாதிச்சான்று வழங்காததை கண்டித்து கோசமிட்டனர்.

Advertisement

விழுப்புரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான காவலர்கள்  அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.  இதனையடுத்து, விரைந்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments