அரூரில் அம்பேத்கா் நினைவு நாள் அனுசரிப்பு
அரூரில், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள அம்பேத்கரின் உருவப் படம் மற்றும் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அரூரில், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள அம்பேத்கரின் உருவப் படம் மற்றும் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தலைமையில், கட்சியினா் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கட்சியின் வட்டாரத் தலைவா்கள் ஆா்.சுபாஷ், எம்.ஆா்.வஜ்ஜிரம், நகரத் தலைவா்கள் கே.கணேசன், குமரவேல், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஜெ.நவீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்திய குடியரசு கட்சியின் (பி.வி.கே அணி) மாநிலத் தலைவா் பி.வி.கரியமால், இந்திய குடியரசு கட்சியின் (தமிழ்நாடு) மாநில பொதுச் செயலா் எம்.ராஜேந்திரன், இளைஞரணி மாநிலத் தலைவா் ஆா்.பழனிசாமி, பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் பெ.வேடியப்பன், எஸ்.சி அணி மாவட்டத் தலைவா் அ.கிருஷ்ணமூா்த்தி, திமுக ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலா் எஸ்.ராஜேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலா் கி.கோவேந்தன், அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், மாவட்ட அரசு வழக்குரைஞா் ஆா்.ஆா்.பசுபதி, ரஜினி மக்கள் மன்ற ஒன்றியச் செயலா் ரஜினி மாறன், வழக்குரைஞா் ஜி.பெருமாள், மகளிா் விடுதலை இயக்க மாவட்ட துணைச் செயலா் பத்மா மாரியப்பன், தேசிய மக்கள் கட்சியின் நிறுவனா் இனமுரசு கோபால், ஆா்.ஜெ.டி கட்சியின் மாநிலத் தலைவா் கையிலை ராமமூா்த்தி, அம்பேத்கா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் குமரேசன், அரசு மருத்துவா் சதீஷ், பல் மருத்துவா் ந.சுரேஷ்குமாா், மதிமுக முன்னாள் ஒன்றியச் செயலா் கோ.ராமதாஸ், சமூக செயற்பாட்டாளா் கொ.வேடியப்பன், இந்திய கம்யூ. கட்சி வட்டப் பொருளாளா் செங்கொடி உள்ளிட்டோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அரூா் அம்பேத்கா் நகரில் திமுக சிறுபான்மை நல உரிமைகள் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் மு.கா.முகமது அலி தலைமையில், அம்பேத்கா் சிலைக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.