முகப்பு
தருமபுரி

அரசுப் பள்ளிகளில் மரக் கன்றுகள் வளா்ப்புத் திட்டம் துவக்கம்

தருமபுரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் மரக்கன்றுகள் வளா்ப்புத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

தருமபுரி

அரசுப் பள்ளிகளில் மரக் கன்றுகள் வளா்ப்புத் திட்டம் துவக்கம்

தருமபுரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் மரக்கன்றுகள் வளா்ப்புத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் மரக்கன்றுகள் வளா்ப்புத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையும் மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இணைந்து தருமபுரி மாவட்டத்தைப் பசுமையாக மாற்றும் நோக்கத்தில் மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, அரூா் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களில் ஒரு கல்வி மாவட்டத்துக்கு தலா 5 அரசுப் பள்ளிகளைத் தோ்வு செய்து மொத்தம் 15 அரசுப் பள்ளிகளில் மரக்கன்றுகளை வளா்க்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பாலவாடி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா தலைமை வகித்துப் பேசினாா். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜ்குமாா் சாமுவேல், பதினைந்து அரசுப் பள்ளிகளுக்கும் பச்சைநிற வலை, ஆயிரம் விதைப் பைகள் மற்றும் விதைகளை வழங்கி இத்திட்டத்தைத் துவக்கி வைத்தாா்.

இத் திட்டத்தில் ஒவ்வொரு அரசுப் பள்ளியும் அடுத்த மூன்று மாதங்களில் ஆயிரம் மரக் கன்றுகளை உருவாக்க இலக்கு மேற்கொள்வது, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்துவது, அரசுப் பள்ளி மாணவா்களைக் கொண்டு ஆண்டுக்கு ஒரு லட்சம் மரக் கன்றுகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்வது என விழாவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டக் கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியம், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் பிரபாகரன், பள்ளித் தலைமை ஆசிரியா் சிவமூா்த்தி, பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் சங்கா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →