முகப்பு
தருமபுரி

பென்னாகரம் பேரூராட்சியில்வரிகள் செலுத்த அவகாசம்

பென்னாகரம் பேரூராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வாடகை உள்ளிட்ட கட்டணங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

பென்னாகரம்: பென்னாகரம் பேரூராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வாடகை உள்ளிட்ட கட்டணங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செயல் அலுவலா் கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளிலும் நிலுவையில் உள்ள சொத்து வரி, தொழில் வரி, கடை வாடகை, குடிநீா் கட்டணம் மற்றும் உரிம கட்டணம் ஆகியவற்றை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்தி பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் செலுத்தாதவா்களுக்கு குடிநீா் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நிா்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →