முகப்பு
தருமபுரி

5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது எல்லப்புடையாம்பட்டி மணவாளன் சாமி ஏரி

அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மணவாளன் சாமி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி மணவாளன் சாமி ஏரி.
பகிர்:

அரூர்: அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மணவாளன் சாமி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரூர் வட்டம், எல்லப்புடையாம்பட்டியில் அமைந்துள்ளது மணவாளன் சாமி ஏரி. இந்த ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டாகும். இந்த ஏரியில் தண்ணீர் தேங்கினால் எல்லப்புடையாம்பட்டி, கம்மாளம்பட்டி, கல்லேரி, மாவேரிப்பட்டி பகுதியிலுள்ள மக்களுக்கு குடிநீர் பிரச்னைகள் நீங்கும். அதே நேரத்தில் ஆயிரகணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறும். இந்த நிலையில், போதிய பருவமழை இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளாக மணவாளன் சாமி ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை.

கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக, வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பியது. அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரானது வரட்டாற்றின் பழைய ஆயக்கட்டு கால்வாய் வழியாக எல்லப்புடையாம்பட்டி மணவாளன் சாமி ஏரிக்கு கடந்த 10 தினங்களாக தண்ணீர் சென்றது. தற்போது, ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், ஏரி நிரம்பி அதன் உபரி நீர் அருகில் உள்ள கல்லேரிக்கு செல்கிறது.

கிடா வெட்டி நேர்த்திக் கடன்

கடந்த 5 வருடங்களாக மணவாளன் சாமி ஏரி வறண்டு கிடந்ததால் அப் பகுதியிலுள்ள விவசாயிகள் வேளாண்மை பணிகளுக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் இல்லாமல்

பல்வேறு சிரமங்களை அடைந்தனர். இதையெடுத்து, மணவாளன் சாமி நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறியதை தொடர்ந்து, அப் பகுதியிலுள்ள விவசாயிகள் கிடா வெட்டி, ஏரியின் கரைப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மணவாளன் சாமி மற்றும் ஏரியை வழிபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →