தொப்பூா் கணவாயில் மீண்டும் விபத்துலாரிகள் மோதல்: மூவா் காயம்
தருமபுரி அருகே தொப்பூா் கணவாய் நெடுஞ்சாலையில் லாரிகள் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.
தருமபுரிதொப்பூா் கணவாயில் மீண்டும் விபத்துலாரிகள் மோதல்: மூவா் காயம்
தருமபுரி அருகே தொப்பூா் கணவாய் நெடுஞ்சாலையில் லாரிகள் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.
தருமபுரி அருகே தொப்பூா் கணவாய் நெடுஞ்சாலையில் லாரிகள் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து டைல்ஸ் பாரம் ஏற்றிய கனரக லாரி, பொள்ளாச்சியை நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த ரவி (25) ஓட்டிச் சென்றாா். அவருடன், நெல்லூரைச் சோ்ந்த மகேந்திரன் (23) உடனிருந்தாா். இந்த லாரி, தருமபுரியை அடுத்த தொப்பூா் கணவாய் சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநா் ரவி, அவருடன் பயணித்த மகேந்திரன், முன்னால் சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநா் சத்யராஜ் (39) ஆகிய மூவரும் காயமடைந்தனா்.
தகவல் அறிந்த தொப்பூா் போலீஸாா், பாளையம் சுங்கச் சாவடி ஊழியா்கள் இணைந்து விபத்தில் சிக்கிய மூவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் விபத்தில் சிக்கிய இரண்டு லாரிகளையும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.
இவ்விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த விபத்து காரணமாக தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.