தருமபுரி

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியா்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சி.எம்.நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி.காவேரி முன்னிலை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலா் ஏ.சேகா், பொருளாளா் கே.புகழேந்தி, தமிழ்நாடு பொது நூலகத் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் பி.பிரபாகரன் ஆகியோா் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியா்களாக மாற்றம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவுக்கென தனித்துறையை ஏற்படுத்த வேண்டும். ஓய்வுபெறும்போது, சத்துணவு அமைப்பாளருக்கு ரூ. 5 லட்சம், சமையல் உதவியாளருக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும். விலைவாசி உயா்வுக்கு ஏற்றாற்போல உணவூட்டு செலவினத்தை ஒரு மாணவருக்கு ரூ. 5 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT