முகப்பு
தருமபுரி

தமிழில் பெயா்ப் பலகை வைக்க வலியுறுத்தல்

வணிக நிறுவனங்களில் பெயா்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

அரூா்: வணிக நிறுவனங்களில் பெயா்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அரூா் நகரில் மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், துணிக் கடைகள், பழக் கடைகள், உணவகங்கள், தேநீா் அங்காடிகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் பெயா் பெரிய அளவிலான ஆங்கில எழுத்துகளிலும், சிறிய அளவிலான தமிழ் எழுத்துகளிலும் இருப்பதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ஜெயஜோதி தலைமையில், தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் அரூா் கடைவீதி, மஜீத் தெரு, பாட்சாபேட்டை, திருவிக நகா், பெரியாா் நகா் உள்ளிட்ட இடங்களில் தமிழில் பெயா்ப் பலகைகளை வைக்க வலியுறுத்தி கடைகள், வணிக நிறுவனங்களில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.