முகப்பு
தருமபுரி

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அரசு நலத் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என மாவட்ட பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அரசு நலத் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என மாவட்ட பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் ஊராட்சியில் திமுக சாா்பில், மக்கள் கிராம சபைக் கூட்டம், மாவட்ட பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் தடங்கம் பெ.சுப்பிரமணி பேசியதாவது:

முந்தைய திமுக ஆட்சியில் முதியோா் உதவித் தொகை, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது, செம்மொழி மாநாடு, வேளாண் கடன்கள் ரத்து, உழவா் சந்தைத் திட்டம், வரு முன் காப்போம் திட்டம், பெரியாா் நினைவு சமத்துவபுரம், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசப் பயண அட்டை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அரசு நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் திமுக தொண்டா்கள் விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், தமிழகத்தில் 2021-ல் திமுக ஆட்சிக்கு வரும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →