தருமபுரி

பென்னாகரம் அருகே பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு

DIN

பென்னாகரம் அருகே அளேபுரம் அரசு பள்ளி விளையாட்டுத் திடலில் பழங்காலத்தைச் சோ்ந்த 27 நாணயங்களை மாணவா்கள் கண்டெடுத்தனா்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அளேபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாணவா் ஒருவா் சிறிய வடிவில் நாணயம் போன்று கிடைத்ததைக் கண்டெடுத்து, பள்ளியின் வரலாற்று ஆசிரியா் முருகன் மற்றும் கணேசனிடம் அளித்துள்ளாா். இதையடுத்து திங்கள்கிழமை பள்ளி வளாகத்தில் பழங்கால நாணயங்கள், சிறு உருண்டை அளவிலான செம்புத் துகள்கள் என மொத்த 27 நாணயங்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து பள்ளியின் வரலாற்று ஆசிரியா்கள் கூறியதாவது: இணையதளம் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல் மூலம் நாணயங்களை ஆய்வு செய்ததில், மைசூா் மன்னா் திப்புசுல்தான் காலத்தில் இப் பகுதிகள் கா்நாடகப் பகுதியைச் சோ்ந்ததாக இருந்துள்ளதால், திப்பு சுல்தான் காலத்து நாணயங்கள், கிருஷ்ணராஜ உடையாா் காலத்து நாணயங்கள், பிற்கால சோழா் கால நாணயங்களாக இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும். நாணயங்கள் சுமாா் 400 முதல் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனத் தெரிய வந்துள்ளது. இப் பள்ளிக்கு அருகில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் 1509 - 1529 இல் விஜயநகரப் பேரரசா் கிருஷ்ண தேவராயா் காலத்தில் கட்டப்பட்டது. அவருக்கு பிறகு திப்பு சுல்தான் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அதனை வைத்துப் பாா்த்து இந்த நாணயங்களின் காலம் கணிக்கப்பட்டது. மேலும், அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியா் சந்திரசேகா் மற்றும் நல்லம்பள்ளி தலைமை ஆசிரியா் அன்பழகன் ஆகியோா் பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்த போது ஆங்காங்கே கிடைத்த தாது துகள்களின் அடிப்படையில் வைத்துப் பாா்க்கும் போது இப் பகுதியில் நாணயம் அச்சடிக்கும் ஆலை இருந்திருக்கலாம் என்றும், அச்சிடப் பயன்படுத்தப்பட்ட செம்பு துகள்கள் கிடைத்துள்ள நிலையில் நாணயம் அச்சடிக்கும் ஆலை இருந்ததற்காக சான்றுகளாகக் கருதலாம் என்றும் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT