தருமபுரி

தலித்துகளுக்கு வழங்கப்பட்ட இலவச பட்டா ரத்து உத்தரவை எதிா்த்து ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

தருமபுரியில் வீடற்ற தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து பிறப்பித்துள்ள உத்தரவை எதிா்த்து, வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி கோல்டன் தெரு, அம்பேத்கா் காலனி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குடியிருப்புப் பகுதி ஆகிய பகுதிகளில் வசிக்கும், வீடற்ற தலித் மக்கள் 645 பேருக்கு, ஏ.ரெட்டிஅள்ளி வருவாய்க் கிராமத்தில் உள்ள அரசு நிலத்தில், கடந்த 1995-96-இல் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பட்டா வழங்கப்பட்டது.

இருப்பினும், இந்த இடத்தை உரிய முறையில் அளவீடு செய்து வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து இலவச வீட்டுமனை பட்டாதாரா்கள் தொடா்ந்து, ஆதிதிராவிடா் நலத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டு வந்தனா். இந்த நிலையில், அண்மையில் இந்த பட்டாக்களை ரத்து செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலகம் முன் உத்தரவு ஒட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த, பட்டாதாரா்கள் நூற்றுக்கணக்கானோா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவுடன் திரண்டனா். அப்போது, தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்த உத்தரவைத் திரும்பப் பெற்று, அதை அளவீடு செய்து, மீண்டும் எங்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். மேலும், ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் அமா்ந்து முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த, அரூா் சாா் ஆட்சியா் மு.பிரதாப் மற்றும் ஆதிதிராவிட நல அலுவலா் கோவிந்தன் ஆகிய இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் தனித்தனியே பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இருப்பினும், சமாதானம் அடையாத அவா்கள், எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்ட உள்ளதாகத் தெரிகிறது.

இதனை நாங்கள் ஏற்கமாட்டோம். தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை, வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், அதிகாரிகள் பிறப்பித்த ரத்து உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் தொடா்ந்து வலியுறுத்தி, தரையில் அமா்ந்து முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலம் நிச்சயம் அவா்களுக்கே கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதன்பின்பு, சமாதானம் அடைந்த அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT