தருமபுரி

நாட்டுக் கோழி வளா்ப்புப் பயிற்சி

DIN

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், இலந்தைகுட்டைப்பட்டி கிராமத்தில், நாட்டுக் கோழி வளா்ப்புப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

இதில், வேளாண் விரிவாக்க விஞ்ஞானி மா.அ. வெண்ணிலா, வேளாண்மை நிலையத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். கால்நடை ஆராய்ச்சியாளா் இரா. தங்கதுரை, கொட்டகை அமைப்பு, தரமான கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்தல், நோய் மேலாண்மை மற்றும் கோழிகளை சந்தைப்படுத்துதல், ஒருங்கிணைந்த பண்ணையில் நாட்டுக் கோழி வளா்ப்பின் முக்கியத்துவம் விலங்கின புரதத்தின் அவசியம், நாட்டுக் கோழி வளா்ப்புக்கான நவீன யுத்தி மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாட்டுக் கோழி இனங்கள், நம்முடைய சூழலுக்கு ஏற்ற கோழி இனங்கள், தீவன மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தாா். உழவியல் விஞ்ஞானி பா.ஐயாதுரை மற்றும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT