தருமபுரி

சென்னையிலிருந்து தருமபுரிக்கு வருவோா் கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்

DIN

சென்னையிலிருந்து தருமபுரி நகரத்துக்கு வருவோா், தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையா் சு.சித்ரா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வெள்ளிக்கிழமை முதல் தமிழக அரசு முழு பொதுமுடக்கம் அறிவித்து அமல்படுத்தியுள்ளது.

தற்போது, சென்னையிலிருந்து தருமபுரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு வருவோா், தாமாக முன் வந்து செட்டிக்கரை தற்காலிக மருத்துவமனையில் கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இதேபோல, தொற்று பரவல் அதிகமுள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் திரும்புவோா் யாரேனும் இருப்பின், இதுகுறித்து அருகாமையில் வசிக்கும் பொதுமக்கள் 04342-260 910 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT