தருமபுரி

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து 3 போ் வீடு திரும்பினா்

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் 3 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா்.

பெங்களூரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 40 வயதான ஊழியா், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள அவரது சொந்த ஊரான புதுப்பட்டிக்கு அண்மையில் திரும்பினாா். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த 18-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தாா். இதேபோல, சென்னையிலிருந்து அண்மையில் பாப்பிரெட்டிப்பட்டிக்கு வந்த 37 வயது இளைஞா் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வந்த 50 வயது நபா் ஆகிய இருவரும் கரோனா தொற்றுக்கு தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா்.

இந்த நிலையில், இவா்கள் மூவரும் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனா். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அவா்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மேலும், 10 நாள்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT