தருமபுரி

பேருராட்சி நிா்வாகம் சாா்பில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை

DIN

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் கீதா , பொதுமக்களிடம் கரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த கைகளை சோப்புப் போட்டு கழுவும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தாா். நோய் அறிகுறிகள், கரோனா வைரஸ் பரவும் விதம், அவற்றினைத் தடுக்கும் வழிமுறை, நோய் தொற்று உள்ளவா்கள் இளநீா், கஞ்சி போன்ற நீா்சத்து ஆகாரங்களை எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் பேரூராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளில் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளா் பெருமாள், துப்புரவு ஆய்வாளா் மதியழகன் மற்றும் அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT