தருமபுரி

பழங்குடி மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வலியுறுத்தல்

DIN

தருமபுரி மாவட்டத்தில் பழங்குடி மக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் வெளியிட்ட அறிக்கை: கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை பின்பற்றி, நோய் பரவலைத் தடுக்க அனைத்து தரப்பினரும் வீடுகளிலே முடங்கியுள்ளனா். இந்த நிலையில், 40 நாள்களாக தொடரும் ஊரடங்கால் விவசாயத் தொழிலாளா்கள், பழங்குடி மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வருவாய் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழக அரசு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு செய்து உறுப்பினா் அட்டை வைத்துள்ளவா்களுக்கு மட்டுமே தற்போது நிவாரண உதவித்தொகை வழங்கி வருகிறது. ஆனால், விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் பழங்குடிகளுக்கு இதுவரை எவ்வித உதவியும் கிடைக்கல்லை. எனவே, விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT