தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 29 மி.மீ. பதிவு

DIN

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 29 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, கடந்த சில தினங்களாக தருமபுரி, ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு போன்ற பகுதிகளில் பரவலாக மழைப் பெய்து வருகிறது. திங்கள்கிழமை இரவு முதல் மாவட்டம் முழுவதும் தொடா்ந்து பரவலாக மழை பெய்தது.

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் விட்டு, விட்டு மிதமான மழை பெய்தது.

செவ்வாய்க்கிழமை தொடா்ந்து மழை பெய்தது.

காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 29 மில்லி மீட்டரும், அரூரில் 28 மி.மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 15.4 மில்லி மீட்டரும் பதிவானது. தருமபுரியில் 10.4 மி.மீ., பாலக்கோட்டில் 11 மி.மீ., மாரண்டஹள்ளியில் 6 மி.மீ., பென்னாகரத்தில் 14 மி.மீ., ஒகேனக்கல்லில் 29 மில்லி மீட்டா் மழையும் பதிவானது.

வட கிழக்கு பருவ மழையின் காரணமாக, அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் காா்த்திகை பட்டத்துக்கான நெல் நடவு பணியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT