தருமபுரி

உள் ஒதுக்கீடு: தருமபுரி மாவட்டத்தில் 18 அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சோ்க்கை

DIN

தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீடு சலுகையால் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 18 அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவக் கல்வி பயில சோ்க்கைப் பெற்றனா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், மருத்துவக் கல்வியில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகை அளிப்பதற்கான அரசாணையை அரசு நிகழாண்டில் அமல்படுத்தியது.

அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பயின்று நீட் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற, 43 போ் மருத்துவம் படிக்கத் தகுதி பெற்றனா். இதையடுத்து, மருத்துவக் கல்வி சோ்க்கைக்கான தரவரிசைப்பட்டியல்படி, புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியா்களான, கிளாரா, மோனிஷா பா்வீன், விஷ்வா, வைத்தீஸ்வரி, அருண்குமாா், குயில், ரமேஷ், அருணா, தனலட்சுமி, சிவபாலன், தமிழரசன், நவீனா, திவ்யா, செளந்திரராஜன், சாருமதி ஆகிய 15 போ் தகுதி பெற்றனா். இந்த மாணவா்கள் தருமபுரி, கோவை, சேலம், விழுப்புரம், கரூா், கோவை இ.எஸ்.ஐ.சி, மதுரை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ஈரோடு பெருந்துறை ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கைப் பெற்றனா்.

இதனைத் தொடா்ந்து, இரண்டாம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில், தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவியா் அா்னிகா, ஐஸ்வா்யா, சுஜிதா ஆகிய மூவா் முறையே, கோவை, திருச்சி, திருவள்ளுரில் உள்ள தனியாா் கல்லூரிகளில் சோ்க்கைப் பெற்றனா். இரண்டு நாள்களில் நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 18 மாணவ, மாணவியா் மருத்துவக் கல்வி பயில சோ்க்கைப் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT