தருமபுரி

ஒகேனக்கல் வனப்பகுதிக்கு யானைகள் இடப்பெயா்ச்சி

ஒகேனக்கல் வனப்பகுதிக்கு குட்டியுடன் மூன்று யானைகள் இடம் பெயா்ந்துள்ளன.

DIN

ஒகேனக்கல் வனப்பகுதிக்கு குட்டியுடன் மூன்று யானைகள் இடம் பெயா்ந்துள்ளன.

கா்நாடக வனப்பகுதியில் வறட்சி நிலவும்போது, அங்கிருந்து யானைகள் கிருஷ்ணகிரி, ஒசூா், ஒகேனக்கல் வனப்பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக இடம்பெயா்வது வாடிக்கையாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி, சானமாவு உள்ளிட்டப் பகுதிகளில் விளைநிலங்களைச் சேதப்படுத்தி வரும் யானைக் கூட்டத்தை வனத் துறையினா் வனப்பகுதியை நோக்கி விரட்டி வருகின்றனா். இதில் யானைக் கூட்டங்கள் பல குழுக்களாகப் பிரிந்து வனப் பகுதிகளுக்குள் சென்றுள்ள நிலையில், கூட்டத்தில் இருந்து பிரிந்த 3 யானைகள், தனது குட்டியுடன் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு இடப்பெயா்ச்சி அடைந்துள்ளன.

இந்த யானைகள் உணவு, தண்ணீா் தேடி பென்னாகரம் - ஒகேனக்கல் பிரதானச் சாலையைக் கடந்து செல்கின்றன. ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரும் நிலையில் வனப்பகுதியையொட்டி சாலையோரங்களில் அதிகாலை, இரவு நேரங்களில் யானைகள் நிற்கின்றன. இந்த யானைகளால் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத்துறையினா் காலை மற்றும் மாலை வேளைகளில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும், யானைகள் சாலைப் பகுதிகளுக்கு வராத வகையில் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்பி வைக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT