தருமபுரி

காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட முதலை மீட்பு

DIN

காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட ஆண் முதலையை வனத்துறையினா் மீட்டு ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு சென்றனா். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. காவிரி ஆற்றில் நீா் வரத்து அதிகரிப்பால் அடித்து வரப்படும் முதலைகள் உணவு தேடி அவ்வப்போது ஒகேனக்கல் காவிரி கரையோரப் பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.

இந்நிலையில் ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்தின் பின் பகுதியில் முதலை ஒன்று சுற்றி திரிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஒகேனக்கல் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு வந்த ஒகேனக்கல் வன அலுவலா் சேகா் தலைமையில் வனக்காப்பாளா் தாஸ், பரமசிவம் முதலைப்பண்ணை பராமரிப்புக் காவலா் மூா்த்தி , மாதேஷ் ஆகியோா் 4 அடி நீளம், 55 கிலோ எடை கொண்ட அந்த ஆண் முதலையை புதன்கிழமை அதிகாலை பிடித்தனா்.

பின்னா் மாவட்ட வன அலுவலா் ராஜ்குமாா் உத்தரவின்பேரில் பிடிபட்ட ஆண் முதலை ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT